ரூ.24 ஆயிரத்திலிருந்து ரூ.8 கோடி... அன்று லாரி டிரைவர்... இன்று கம்பெனி முதலாளி!

வெறும் ரூ.24 ஆயிரம் முதலீடு செய்து தொழிலைத் தொடங்கியவர், தனது கடும் உழைப்பினால், இன்று ரூ.8 கோடி அளவுக்கு டேர்ன்ஓவர் செய்கிறார். சென்னை - பெருங்களத்தூரில் எவரெஸ்ட் சிமென்ட் பைப்ஸ் என்னும் நிறுவனத்தை நடத்திவரும் ரகு,  கடந்துவந்த பாதையை நாம்  தெரிந்துகொண்டால், கடும் உழைப்பு எல்லோரையும் முன்னேற்றும் என்கிற நம்பிக்கை பிறக்கும். இனி ரகு சொல்வதைக் கேட்போமா..?

‘‘ஓரகடத்தில் ஒரு ஓலைக்குடிசையில்தான் என் வீடு. என் பெற்றோர்கள் படிக்காத வர்கள். ஆனாலும், என்னைப் படிக்க வைத்தார்கள். நான் பள்ளியில் படித்த சமயத்தில் மழை பெய்யும். நாங்கள் இருக்கும் ஓலைக்குடிசை  ஒழுகும். நாங்கள்  தூங்க முடியாமல் ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்துகொண்டிருப்போம். ‘எல்லோரும் ஓட்டு வீட்டிலும், காரை வீட்டிலும் இருக்கும்போது நாம் மட்டும் இப்படி இருக்கிறோமே. இந்த நிலையிலிருந்து நாம் மாற வேண்டும்’ என்று நினைப்பேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்