ஷேர்லக்: சந்தையில் களமிறங்கிய இளைஞர்கள்!

ஓவியம்: அரஸ்

வெள்ளிக்கிழமையன்று சென்செக்ஸ் 400 புள்ளிகள் இறக்கம் கண்டிருந்தது. அடுத்த வாரம் சந்தை மேலேயா அல்லது கீழேயா என நாம் யோசித்துக் கொண்டிருக்க, நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். வழக்கம்போல கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லையே?

‘‘இது எதிர்பார்த்ததுதான். கடந்த சில வருடங் களாகக் குறைந்துகொண்டிருந்த பணவீக்கம் தற்போது மீண்டும் உயரத்தொடங்கியிருக்கிறது. பணவீக்கம் குறைந்துகொண்டிருந்தபோது ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தைக் குறைத்து வந்தது. நடப்பு நான்காம் காலாண்டில், பணவீக்கம் 5.1 சதவிகிதமாக உயரலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணவீக்கம் உயர்வதால் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை.

ஆனால், வட்டி விகிதத்தையும் உயர்த்தவில்லை என்பது ஆறுதலான விஷயம். கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் பணவீக்கம் உயர வாய்ப்பிருப்ப தால், பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைவாசி உயரும் வாய்ப்புள்ளது. அது, நிறுவனங்களின் நிதிநிலைக்குச் சாதகமாக மாறினால், அந்த நிறுவனப் பங்குகள் ஏற்றமடைய வாய்ப்புள்ளது.’’

ஜி.எஸ்.டி-யால் பாதிக்கப்பட்ட எம்.எஸ்.எம்.இ. களுக்கு நல்ல செய்தி வந்திருக்கிறதே?

‘‘ஜி.எஸ்.டி  நடைமுறைக்கு வந்தபின் சிறு, குறு  மற்றும் நடுத்தரத் தொழில்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. இந்தப் பாதிப்பைச் சரிசெய்யும் வகையில், எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் வாங்கிய ரூ.25 கோடி வரையிலான கடன்களுக்கான நிலுவைத் தொகையைச் செலுத்தும் கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி, 90 நாள்களிலிருந்து 180 நாள்களாக உயர்த்தியிருக்கிறது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick