கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன்
கமாடிட்டி சந்தை நிபுணர்,
www.ectra.in

தங்கம் மினி

தங்கம், சென்ற வருடம் டிசம்பர் மாதத் துவக்கத்தில் 29000 என்ற முக்கிய ஆதரவை உடைத்து இறங்கியது.  இது ஒரு வலிமையான இறக்கமாக மாறி, 12.12.17 அன்று 28132 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டது. வலிமையான வீழ்ச்சி நடக்கும்போதெல்லாம், வலிமையான ஏற்றமும் வரலாம் என்று சொல்வோம். அதுவும் தங்கத்தில் நடந்தது.  டிசம்பரில் குறைந்தபட்ச புள்ளியான 28132-ஐ தொட்டபிறகு, படிப்படியாக ஏறி, டிசம்பர் முடிவில், எந்த ஆதரவை உடைத்ததோ, அந்த ஆதரவான 29000 புள்ளியை வந்தடைந்தது. அதுமட்டும் அல்ல, அதைத் தாண்டியும் ஏறியுள்ளது.

கடந்த இதழில் சொன்னது, “தங்கம்.  மேலே 28700 என்ற எல்லையில் வலுவாகத் தடுக்கப்பட்டுள்ளது.  கீழே 28500 என்ற எல்லையில் வலுவான ஆதரவு உள்ளது.”

ஆனால், கடந்த வாரத்தில் தங்கம், பக்கவாட்டு எல்லையின் மேல்பக்க எல்லையை உடைத்து பலமாக ஏறியது. முந்தைய ஆதரவு நிலையான 29000-யைத் தொட்டது. அந்த எல்லையில் சற்றே ஏறி, 29294 என்ற உச்சத்தைத் தொட்டபின், அதைத் தாண்ட முடியாமல், பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

இனி என்ன நடக்கலாம்..? தங்கம் ஒரு வலிமையான ஏற்றத்திற்குப்பிறகு, தற்போது ஒரு பக்கவாட்டு நகர்வாக, மேலே 29320-ல் தடுக்கப்பட்டும், கீழே 29100 என்ற எல்லையில் ஆதரவை எடுத்தும், நகர்ந்துகொண்டு இருக்கிறது.  எப்போதுமே பக்கவாட்டு நகர்வில் இருக்கும்போது, அடுத்து பெரிய நகர்வுகள் வரலாம். இனி, மேல் எல்லையான 29320-யை உடைத்தால்,  அடுத்து 29450 மற்றும் 29780 என்ற எல்லைகளை நோக்கி நகரலாம். கீழே 29100-யை உடைத்தால், பெரிய இறக்கம் வரலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்