டாக்ஸ் ஃபைலிங்... தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்!

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன், கோவை

ருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது பலரும் 12 விதமான தவறுகளைச் செய்கிறார்கள். இதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய ரீஃபண்ட் கிடைப்பதில் காலதாமதம் ஆகிறது. அந்தத் தவறு கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. தவறான ஐ.டி.ஆர் படிவம்

உங்கள் வருமானம் எந்த வகையைச் சார்ந்தது என்பதைப் பொறுத்து, முதலில் சரியான ஐ.டி.ஆர் (ITR) படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது, ஏழு ஐ.டி.ஆர் படிவங்கள் உள்ளன. உதாரணமாக, ஐ.டி.ஆர்-1 சம்பள வருமானம் மற்றும் வட்டி பெறும் எந்தவொரு நபருக்கும் பொருந்தும். ஒருவர் சம்பளத்துடன் சேர்ந்து மூலதன ஆதாயத்தைப் பெற்றிருந்தால், அவர்  ஐ.டி.ஆர்- 2-யைத் தேர்வுசெய்ய வேண்டும். சரியான வருமான வரிப் படிவத்தைத் தேர்ந்தெடுத்து வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால் நிராகரிக்கப் படுவதைத் தவிர்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick