தொழில் பட்டியலில் 15-வது இடம்... பின்தங்குகிறதா தமிழகம்? | Tn 15th Ease Doing Business Ranking State Says Report Not Acceptable - Nanayam Vikatan | நாணயம் விகடன்

தொழில் பட்டியலில் 15-வது இடம்... பின்தங்குகிறதா தமிழகம்?

ந்தியாவில் தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கேற்ற மாநிலங்கள் பட்டியலில்  தமிழகம் 15-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.  2017-ம் ஆண்டின்படி, எளிதாகத் தொழில் தொடங்கும் வசதியுள்ள மாநிலங்கள் தரவரிசைப் பட்டியலை மத்தியத் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தொழில் தொடங்கச் சாதகமான சூழலை ஏற்படுத்த மத்திய அரசு பரிந்துரைக்கும் யோசனைகளில் எத்தனை யோசனைகளை ஒவ்வொரு மாநிலமும் செயல்படுத்துகின்றன என்பதன் அடிப்படையில்  இந்தத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

15-வது இடத்தில் தமிழகம்

இதில், ஆந்திரா மீண்டும் முதலிடத்தைத் தக்கவைத்துள்ள (மதிப்பு 98.42%) நிலையில், அதிலிருந்து பிரிந்து சென்ற தெலங்கானா மாநிலம் இரண்டாவது (98.33%) இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மூன்றாவது இடத்தில் ஹரியானாவும் (98.07%), நான்கு, ஐந்தாவது இடங்களில் முறையே ஜார்க்கண்ட், குஜராத் மாநிலங்கள் உள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick