டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - வேலை ரெடி... நீங்க ரெடியா..?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 13

ற்பத்தித் துறையில் ஆண்டுதோறும் பல லட்சம் பணியாளர்கள்  உருவாகிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் முழுத் திறன்பெற்றவர்களா என்றால் சந்தேகம்தான். அவர்களைத் திறன்மிக்கவர்களாக மாற்றும் வேலையைச் செய்வதில் பெரிய அளவில் வெற்றி கண்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த ஸ்கில்வெரி (Skillveri). இதன் வெற்றிக்கதையை எடுத்துச் சொன்னார்கள் சபரிநாத் மற்றும் கண்ணன்.

   இன்ஸ்பிரேஷன்

“இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 60% பேர் இளைஞர்கள்தான். வருடந்தோறும் பல லட்சம் இளைஞர்கள் புதிதாகப் பணியில் சேர்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவரும் போதிய அளவுக்குத் தொழில்நுட்பப் பயிற்சி பெற்றிருக்கிறார்களா என்றால், இல்லை. அதனால்தான் டெல்லி மெட்ரோ பணிகளுக்காக பெருவிலிருந்தும், டெல்லி விமான நிலையப் பணிகளுக்காக சீனாவிலிருந்தும் ஆட்களை அழைத்து வரவேண்டியிருக்கிறது.

சில ஆண்டுகளுக்குமுன்பு, ஒரு மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவரைச் சந்தித்தோம். அவர் பணிபுரியும் நிறுவனத்தில் வெல்டிங் செய்யும் ஊழியர்களில் பலர் வெல்டிங் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாக இல்லை. இதனால், அந்த நிறுவனத்தின் உற்பத்தியில் சிலபல சிக்கல்கள். ‘இந்தப் பிரச்னையைச் சரிசெய்து தரமுடியுமா?’ என்று கேட்டார். உடனே சரி என்று சொன்னோம். அந்தப் பிரச்னையைத் தொழில்நுட்பத்தின் உதவி யுடன் எப்படி சரிசெய்யலாம் என்று யோசித்தபோது உருவானதுதான்  ஸ்கில்வெரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick