கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - தித்திக்கும் லாபம் தரும் தேன்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மதிப்புக் கூட்டல் தொடர் - 12

ணவுப் பொருள்களில் மிகுந்த இனிமையான, சத்தான பொருள் தேன். உலகில், தேன் சந்தையில் நிகழும் பணப் பரிமாற்றம் மட்டும் பில்லியன் டாலர். அமெரிக்காவில் மட்டும் ஓர் ஆண்டுக்கு 94 மில்லியன் கிலோ கிராம் தேனும்,  கனடாவில் ஓர் ஆண்டுக்கு 34 மில்லியன் கிலோ கிராம் தேனும் உற்பத்தி செய்யப்படுகிறது. 2012-ம் ஆண்டு கணக்குப்படி, சீனா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் தேன் உற்பத்தியில் முதல் மூன்று இடங்களை பிடித்திருந்தன.

பில்லியன் டாலர் அளவுக்குப் பணப் பரிமாற்றம் செய்யக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த தொழில், இன்று கலப்படங்களின் வருகையால் மதிப்பிழந்து காணப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணமே தட்டுப்பாடுதான்!

தேவை இருக்கும் பொருளுக்குத்தானே சந்தையில் அதிக மரியாதை இருக்கும். இதைச் சரியாகப் புரிந்துகொண்ட பலரும், சுத்தமான தேனை உற்பத்தி செய்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஊராட்சியில் உள்ள முதியன்வலசு கிராமத்தைச் சேர்ந்த தண்டாயுதபாணி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர, தேனில் மதிப்புக் கூட்டல் பொருள்கள் செய்தும் லாபம் ஈட்டி வருகிறார். பண்ணையில் தேன் எடுத்துக் கொண்டிருந்தவரிடம் நாம்  பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!