பிட்காயின் பித்தலாட்டம் - புதிய தொடர் -1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

முகவுரை

டிசம்பர் 2009, நியூயார்க்

நியூயார்க்கில் உள்ள பர்சேஸ் பகுதி. மாஸ்டர்கார்டு இன்டர்நேஷனல் உலகத் தலைமையகத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள தனது அலுவலக அறையில், அதன் தலைவர் விஜய் பங்கா மிகவும் படபடப்புடன் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தார்.

அதேசமயம், பல மைல் களுக்கு அப்பால் கலிஃபோர்னியா வின் ஃபாஸ்டர் நகரத்திலிருக்கும் பல பில்லியன் டாலர்கள் பணப் பட்டுவாடாவில் உலகளவில் ஜாம்பவானாகவும், மாஸ்டர் கார்டுக்கு மிகப் பெரிய போட்டி நிறுவனமாகவும் இருந்துவரும் விசா இன்டர்நேஷனல் தலைமை யகத்தில், அதன் தலைமை நிர்வாக அதிகாரியான ஜோசப்  சாண்டர்ஸும் அதிர்ச்சியில் இருந்தார்.

அவர்களின் படபடப்புக்கும் கலக்கத்துக்கும் காரணம், தேசத் தலைவரின் தலைமையில் சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நடந்த ஒரு கூட்டம்தான். வழக்கமான ஒரு கூட்டமாக அது இருந்தாலும், இவர்களுடைய பிசினஸ் மாடலின் அடித்தளத் தையே அந்தக் கூட்டம் குலுக்கி எடுத்துவிடக்கூடும்.

இருவரில் விஜய் கொஞ்சம் இணங்கக்கூடியவர். அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு யானை அளவுக்கு ஈகோ இருக்கும் என்பதை நன்கு அறிந்தவர். ஜோசப் அவரது `ஐவரி டவரி’லிருந்து வெளியேவந்து விஜயைத் தொடர்பு கொள்ளமாட்டார். எனவே, விஜய் அவருடைய கெளரவத்தைச் சற்றே கீழிறக்கி வைத்துவிட்டு, தனது செகரட்டரியைக் கூப்பிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!