கம்பெனி ட்ராக்கிங்

டால்மியா பாரத் லிமிடெட்!(NSE SYMBOL: DALMIABHA) டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

டால்மியா பாரத் லிமிடெட் (NSE SYMBOL: DALMIABHA), 1939-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு,  அன்றிலிருந்து இன்றுவரை சிமென்ட் தயாரிப்பில் ஒரு முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

2014-ம் ஆண்டுவரை ஐந்து இடங்களில் உற்பத்தி நிலையங்களைக் கொண்டிருந்த இந்த நிறுவனம், 2017-ம் ஆண்டின் இறுதியில் அதனை 11 உற்பத்தி நிலையங்களை அதிகப் படுத்திக்கொண்டதன் மூலம், 12 மில்லியன் டன் அளவாக இருந்த சிமென்ட் உற்பத்தி வசதியை, 25 மில்லியன் டன் அளவாக மாற்றியமைத்தது. தற்சமயம் அகில இந்திய ரீதியாக எட்டு மாநிலங்களில் தனது உற்பத்தி நிலையங்களைக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் இந்த நிறுவனம், அல்ட்ராடெக், லபார்ஜ் ஹோலிசிம், ஸ்ரீசிமென்ட் போன்ற பெரிய சிமென்ட் உற்பத்தி நிறுவனங் களின் வரிசையில் நான்காவது இடத்தை எட்டியுள்ளது.

இதுதவிர, ஒ.சி.எல் இந்தியா லிமிடெட் (முந்தைய ஒரிஸா சிமென்ட் லிமிடெட்) எனும் கிழக்கிந்தியாவில் செயல்படும் முன்னணி சிமென்ட் உற்பத்தி நிறுவனத்தில், இந்த நிறுவனம் 74 சதவிகிதப் பங்குகளை வைத்துள்ளது. இதுதவிர, சமீப காலத்தில் வட கிழக்கு மாநிலங்களில் செயல்பட்டுவந்த நிறுவனங்களான அதுனிக் சிமென்ட் மற்றும் கல்காம் சிமென்ட் போன்ற பிராண்டுகளையும் கையகப்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!