பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை / கோவா - த்ரில் தொடர் - 8 | Beware of Bitcoin fraud - Nanayam Vikatan | நாணயம் விகடன்

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை / கோவா - த்ரில் தொடர் - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

கோவா விமானநிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள் தான்யா. அவளுடைய விமானம் இன்னும் மூன்று மணி நேரத்தில் டேக்-ஆஃப் ஆகும்.

காலையில் அவள் மிகவும் மோசமான `மூடில்’ இருந்தாள். பீச்சில் சந்தித்தபின்பு, வருண் மீண்டும் காணாமல் போய்விட்டான். அவள் தங்கியிருக்கும் அறை வரை அவளைக் கொண்டுவந்து விட்டு விட்டு ஒரு குட்பைகூடச் சொல்லாமல் போய் விட்டான். தொடர்ந்து தொடர்பில் இருப்போம் என்பது போன்று அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அவன் எப்படித் திடீரென்று வந்தானோ, அதுபோலவே எந்தத் தகவலையும் சொல்லாமல் திடீரென்று காணாமலும் போய்விட்டான்.

தான்யாவின் சிந்தனையைக் காவல்துறையின் சைரன் கலைத்தது. தான்யா பஸ்ஸின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அவள் தவறான பாதையில் வந்துகொண்டிருந்த மூன்று போலீஸ் வேன்களையும், இரண்டு ஃபயர் என்ஜின் வண்டி களையும் பார்த்தாள். அவர்கள் மிகவும் அவசரத்தில் இருந்தது தெரிந்தது. வண்டிகள் நகர முடியாமல் அங்கங்கே நின்று கொண்டிருந்ததால் டிராஃபிக் ஸ்தம்பித்தது. அவள் வாட்சைப் பார்த்தாள், விமானத்தைத் தவறவிட்டுவிடுவோமோ எனக் கவலைப்பட்டாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick