குறையும் ரூபாய் மதிப்பு... பங்குச் சந்தைக்குப் பாதிப்பா?

சுமதி மோகனப் பிரபு

டந்த 2018-19-ம் நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே, தகவல் தொழில்நுட்பப் பங்குகளின் உதவியுடன் மேல்நோக்கிப் பயணித்து வருகிறது உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகள்.  அதேசமயம், நமது இரண்டு முக்கியப் பங்குச் சந்தைகளும் கடந்த இரண்டு வாரங்களாக மேல்நோக்கிச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன. சந்தைகளின் இந்தத் தடுமாற்றத்துக்கு என்ன காரணம், இந்தக் காரணங்கள் சாமான்யர்களை எப்படிப் பாதிக்கும் என்பது குறித்த கேள்விகள் முக்கியமானவை.

   அமெரிக்கச் சந்தைகளின் தாக்கம்

வருகிற 2020-ம் ஆண்டுக்கான அமெரிக்க அரசாங்கத்தின் கடன் ஒரு ட்ரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.66 லட்சம் கோடி)  அளவை எட்டும் என்கிற அச்சத்தில், அமெரிக்க அரசின் பத்தாண்டு கடன் பத்திரத்தின் வட்டி விகிதம் 3 சதவிகிதத்தை மீண்டும் எட்டியுள்ளது.  

எதிர்பார்த்ததைவிட அதிகமான தொழில் வளர்ச்சி மற்றும் வேகமாக அதிகரிக்கும் பண வீக்கத்தின் அடிப்படையில் அமெரிக்க மத்திய வங்கி 2018-ல் இரண்டு தவணைகளாக 0.50% வரை வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற பயமும் அமெரிக்கச் சந்தைகளை ஆட்டிப் படைக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick