வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் இணைப்பு... - போட்டியைச் சமாளிக்க புதிய வியூகம்!

மெரிக்காவின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாள்களில் ஃப்ளிப்கார்ட்டை வால்மார்ட் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என இரு நிறுவனங்களுக்கும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்விதமாக அந்த நிறுவனத்தின் பங்குகளை 51% அல்லது அதற்கும் கூடுதலான பங்கினை வாங்க வால்மார்ட் முடிவு செய்துள்ளது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 40% பங்குகளை வாங்க வால்மார்ட் நிறுவனம் முதலில் பேரம் பேசத் தொடங்கியது. பிற்பாடு கூடுதலான அளவில் பங்கை வாங்க முடிவெடுத்தது.

ஒரு நிறுவனம், இன்னொரு நிறுவனத்தை வாங்கும்போது, அந்த நிறுவனத்தின் நிதிநிலை, வர்த்தக வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்வது வழக்கம். இந்த ஆய்வினை வால்மார்ட் செய்து முடித்துவிட்டதாகக் சில நாள்களுக்குமுன்னர் தகவல் வெளியானது. இதனால், ஃப்ளிப்கார்ட்டை வால்மார்ட் கையகப்படுத்தும் அறிவிப்பு  எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick