நிஃப்டியின் போக்கு: காளையின் பிடியில் சந்தை!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

நான்கு நாள்கள் ஏற்றத்தையும் ஒரேயொரு நாள் இறக்கத்தையும் சந்தித்த நிஃப்டி, வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 128 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

வரும் வாரத்தில் அமெரிக்க வட்டி விகித முடிவுகள் வெளிவர இருக்கின்றன. டெக்னிக்கலாக ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறபோதும், காலாண்டு முடிவுகளும், செய்திகளும் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும். 

டெக்னிக்கல் சூழல்களை வைத்துப் பார்த்தால், தொடர்ந்து அதிக வால்யூமுடன் கூடிய ஏற்றம் வந்தால், காளைகளின் கையில் முழுமையாகச் சந்தை போய்விடக்கூடும் என்பதற்கான வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick