குறையும் ரூபாய் மதிப்பு... தங்கம், பெட்ரோல் விலை இன்னும் உயருமா? | Decrease in currency value will affect Petrol and diesel price? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/05/2018)

குறையும் ரூபாய் மதிப்பு... தங்கம், பெட்ரோல் விலை இன்னும் உயருமா?

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

மது மனம் கவர்ந்த தங்கமாக இருந்தாலும் சரி, அன்றாடம் நாம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசலாக இருந்தாலும் சரி, ரூபாயின் மதிப்பு சரிவதால் இவற்றின் விலை உயர்ந்துகொண்டே போகிறது. தற்போது ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.67-க்குமேல் இருக்கிறது. இது 68 ரூபாயைத் தாண்டி, 70 ரூபாயைத் தொடுகிற நிலை உருவானால், தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை இன்னும் கணிசமாக உயரும் என்பது நம் எல்லோரையும் பயமுறுத்தும் விஷயம். இதனால் சாதாரண மக்கள் அனைவருமே பாதிக்கப்படும் நிலை உருவாகும்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க