பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34 | Worst Bitcoin Scams - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/10/2018)

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மும்பை

மாள்விகா தற்கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறை எடுத்துக் கொண்டவுடன் வேகமாக வேலைகள் நடந்தன. சி.பி.ஐ பல சாட்சிகளை அழைத்து விசாரிக்க ஆரம்பித்ததுடன், என்.ஒய்.ஐ.பி மற்றும் பல தரப்புகளிலிருந்து தரவுகளைச் சேகரித்தது. என்.ஒய்.ஐ.பி -யிலிருந்து குறிப்பாக, அவர்கள் மாள்விகாவின் மின்னஞ்சல்கள், டெலிபோன் பதிவுகள் போன்றவற்றைக் கேட்டனர். இந்த விசாரணை தான்யாவுடனான சந்திப்பையும் உள்ளடக்கியதாக இருந்தது.

சி.பி.ஐ-யின் டெபுடி டைரக்டரும், இந்த வழக்கின் அதிகாரியுமான கபீர்கான் மும்பைக் குற்றவியல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடனும், சப்-டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட்டுடனும் வந்துசேர்ந்தார்.

‘`உங்கள் அம்மாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டைப்  படித்தீர்களா? அதில் கொலைக் கான எந்தச் சாத்தியமும் இருப்ப தாகக் குறிப்பிடப்படவில்லை’’ என்றார்.

‘‘உண்மைதான். ஆனால், நான் அதை நான் நம்பவில்லை. அம்மா மிகவும் மன தைரியம் கொண்டவர். எந்த விதத்திலும் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கமாட்டார். தற்கொலை செய்துகொள்வது  அவரைப் பொறுத்தவரை,  கோழைத்தனமான செயல்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close