கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 18 - கலங்க வைக்கும் கடன்... மீண்டு வரும் வழிகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பிசினஸ் செய்வதில் கில்லிகளாக இருக்கும் பலரும் நிதி சார்ந்த செயல்பாடுகளில் கோட்டைவிட்டு   விடுகிறார்கள். பல பிசினஸ் சாம்ராஜ்யங்கள் சரிந்து போகக் காரணம் நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல் விட்டதுதான். கெமிக்கல் பிசினஸ் செய்துவரும் கோவையைச் சேர்ந்த சுப்புராமன் இன்று கடனில் தத்தளிப்பதற்கு என்ன காரணம்..? அவரே சொல்கிறார்...

“எனக்கு 50 வயது. நான் 15 ஆண்டுகளாக பிசினஸ் செய்துவருகிறேன். என் பிசினஸ் நன்றாகத்தான் போகிறது. ஆனால், சமீப காலமாக என்னால் முழுக் கவனமும் பிசினஸில் செலுத்த முடியவில்லை. காரணம், ரூ.32 லட்சம் வரை இருக்கும் கடன் சுமைதான்.          ரூ.35 லட்சத்துக்கு வீட்டுக் கடன் மூலம் வீடு ஒன்றை வாங்கினேன். என் மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். என் மகள் 12-ம் வகுப்பு படித்து வருகிறாள். நான் பிசினஸ் வளர்ச்சிக்காகவும், வெவ்வேறு செலவுகளுக்காகவும் பல்வேறு காலகட்டங்களில் வாங்கிய கடனும், கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையும் சேர்ந்து ரூ.19 லட்சம் வரை கடன் ஆகிவிட்டது. அதுமட்டுமல்லாமல், கம்பெனியின் விரிவாக்கத்துக்காக ரூ.13 லட்சம் வரை டேர்ம் லோன் வாங்கியிருக்கிறேன். தற்போது, வங்கிகளில் கடன் வாங்கும் தகுதியில் என் கிரெடிட் ஸ்கோர் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்