கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் (மினி)

பங்குச் சந்தை இறங்க இறங்க, தங்கம் விலை ஏறும் என்கிற எதிர்பார்ப்பு சந்தையில் அதிகரித்து வருகிறது. இந்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும்கூட, தங்கம் அதற்கு ஏற்ற வகையில் பெரிய ஏற்றத்தை இதுவரை கொடுக்கவில்லை. அதேசமயம், பெருமளவும் இறங்கவில்லை. தற்போது தங்கம் இந்த இரண்டு நிலைக்கும் நடுவில் இருந்து வருகிறது. ஒருபக்கம், டாலர் இண்டெக்ஸ் ஏறுமுகமாக உள்ளதும், தங்கம் சற்றே பக்கவாட்டு நகர்வில் இருப்பதும் இதற்கொரு காரணமாக இருக்கலாம்.

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் கீழே 31550 என்ற எல்லையைத் தற்போது ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 31880 இன்னமும் தடை நிலையாகவே உள்ளது.”

தங்கம் கடந்த வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 31880-ஐ ஒரே ஒருநாள் மட்டும் உடைத்து மேலே ஏற முயற்சி செய்தது.  அதாவது, சென்ற வாரம் திங்களன்று பெரும் மாற்றம் இல்லாமல் முடிந்த தங்கம், செவ்வாயன்று 31721 என்ற புள்ளியில் ஆரம்பித்து, 32053 வரை வலிமையாக ஏறியது. ஆனாலும், அன்று  வர்த்தகம் முடியும்போது இறங்கி 3871 என்ற எல்லையில்தான் முடிந்தது. இதனால் 31880 என்ற எல்லை இன்னும் வலுவான தடைநிலையாக மாறி இருப்பதையே இது உணர்த்துகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick