கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயிலின் விலைப் போக்கில், முக்கோண உருவமைப்புத் தோன்றினால் எப்படி இருக்கும் என்பதற்கான எடுத்துகாட்டாக அமைந்து இருந்தது. சென்ற வாரம் நாம் சொன்னது:

“முக்கோண உருவமைப்பைத் தோன்றுவித்த நாள் 04.10.2018. அன்று 1674 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டுவிட்டு ஏற ஆரம்பித்தது. அடுத்த நாள் மிக வலிமையாக ஏறி, உச்சமாக 1756-ஐ தொட்டது. இதுதான் முக்கோண வடிவத்தின் உயரம் 82 புள்ளிகள் ஆகும். இதன் ஆதரவு எல்லை 1685 ஆகும். மேலே டாப்பும், குறுகிய நிலையில் 1730 என்பது தடைநிலையாகும். எதை உடைத்தாலும் ஒரு பெரிய நகர்வு காத்திருக்கிறது.”

மென்தா ஆயில் முக்கோண வடிவத்தின் உடனடித் தடைநிலையான 1730-ஐ உடைத்து ஏறியது. டார்கெட்டாக எதிர்பார்த்த புள்ளிகள் 82.  ஆனால், இதில் நாம் 80% மட்டுமே எடுப்பது நல்லது. அந்த வகையில், 65 புள்ளிகள் ஏற்றத்தை எதிர்பார்த்து 1730-ஐ தாண்டினால், அடுத்த டார்கெட் 1795 ஆகும்.  சென்ற வாரம் மென்தா ஆயில் 1730 தடைநிலையை வலிமையாக உடைத்து ஏறி, கடந்த வியாழனன்று உச்சமாக 1796-ஐ தொட்டது. வெள்ளியன்று 1801 வரை ஏறியது கூடுதல் லாபம்.

இனி என்ன செய்யலாம்…? மென்தா ஆயில் அக்டோபர் கான்ட்ராக்ட் முடிவுக்கு  வருவதால், இனி நவம்பர் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம்.  ஒரு வலிமையான ஏற்றத்திற்குப்பிறகு, முக்கியத் தடைநிலையான 1840-க்கு அருகில் உள்ளது.  கீழே முக்கியமான ஆதரவுநிலை 1780 ஆகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick