டேர்ம் இன்ஷூரன்ஸ்... இரண்டு நிறுவனங்களில் எடுக்க முடியுமா? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

டேர்ம் இன்ஷூரன்ஸ்... இரண்டு நிறுவனங்களில் எடுக்க முடியுமா?

கேள்வி - பதில்

என் வயது 30. டேர்ம் இன்ஷூரன்ஸ் தலா 50 லட்சம் ரூபாய்க்கு, இரண்டு காப்பீட்டு நிறுவனங்களில் எடுக்க விரும்புகிறேன் (மொத்த காப்பீட்டுத் தொகை ரூ.1 கோடி). டேர்ம் இன்ஷூரன்ஸை இரண்டு நிறுவனங்களில் எடுக்க முடியுமா, அப்படி எடுத்தால் இரண்டு பாலிசிகளிலிருந்தும் இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியுமா?

செல்வராஜ், சேலம்

கே.பி.மாரியப்பன், இன்ஷூரன்ஸ் நிபுணர்

‘‘இரண்டு நிறுவனங்களில் டேர்ம் பாலிசி எடுக்க முடியும். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது உங்களுடைய வருமானம் மற்றும் உடல்நிலை இரண்டையும் கருத்தில்கொள்வார்கள். உங்களுடைய வருமானம் ரூ.50 லட்சத்துக்குள் இருந்தால் முதல் பாலிசி எடுக்க முடியும். அதேபோல, உடல்நலமும் நல்லபடியாக இருக்கவேண்டும். இரண்டாவதாக வேறொரு நிறுவனத்திலும், ரூ.50 லட்சத்துக்கு  டேர்ம் பாலிசி எடுக்கும்போது, ஏற்கெனவே பாலிசி எடுத்திருக்கிறீர்களா என்ற கேள்வி வரும். அப்போது ஏற்கெனவே எடுத்த பாலிசி தொகையைக் குறிப்பிட வேண்டும். அப்போது, உங்களுடைய வருமானம், ரூ.1 கோடி காப்பீட்டுத் தொகைக்கு ஏற்றதாக உள்ளதா என்று ஆராயப்படும். அதேபோல, உடல்நலத்தையும் பரிசோதிப்பார்கள். உடல் பரிசோதனையும் காப்பீட்டுத் தொகைக்கேற்ப மாறுபடும். இது  ஏற்கத்தக்கதாக இருந்தால் மட்டுமே இரண்டாவது பாலிசி கிடைக்கும். நீங்கள் ஏற்கெனவே எடுத்த பாலிசி குறித்த தகவலை மறைத்து இரண்டாவது பாலிசியும் எடுத்திருந்தால், க்ளெய்ம் செய்யும் போது அது பிரச்னையாக மாறும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick