ஏமாற்றுத் திட்டங்கள்... எச்சரிக்கை டிப்ஸ்!

பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங், 84% ஆண்டு வருமானம் கிடைக்கும் என நம்பி பல லட்சங்களை இழந்துள்ளார். மும்பையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் நம்பிக்கையோடு முதலீடு செய்ததில், 50 லட்சம் ரூபாய் மட்டுமே அவருக்குத் திரும்பக் கிடைத்துள்ளது. இந்த மோசடி குறித்து யுவராஜ் சிங்கின் தாயார் புகார் அளித்ததை அடுத்து அமலாக்கத் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். அந்த நிறுவனம், பணத்தை பிட்காயினில் முதலீடு செய்து, அதிலிருந்து ஹவாலா நெட்வொர்க்கிற்குப் பணத்தைத் திருப்பிவிட்டதாகவும், மேலும் இவரைப்போலவே இன்னும் பலரிடம் முதலீட்டைப் பெற்று ரூ.700 கோடி அளவில் மோசடி செய்திருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick