பணமதிப்பு நீக்கம்... அதிகரித்த டாக்ஸ் ஃபைலிங்!

டந்த மூன்றாண்டுகளில் செலுத்தப்பட்ட வருமான வரி மற்றும் நேரடி வரிகள் குறித்த புள்ளி விவரங்களை மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சி.பி.டி.டி) வெளியிட்டுள்ளது. அதன்படி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்குப்பிறகு 2016-17 மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரித் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 13.5% அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கடுத்த மதிப்பீட்டு ஆண்டில் வரித் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 0.8% மட்டுமே அதிகரித்துள்ளது.

அதேபோல, அனைத்துப் பிரிவைச் சேர்ந்த வருமான வரித் தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை மதிப்பீட்டு ஆண்டு 2015-16-ல் 4.36  கோடியிலிருந்து, 2016-17-ல் 4.95 கோடியாக  உயர்ந்துள்ளது.  இந்த எண்ணிக்கை மதிப்பீட்டு ஆண்டு் 2017-18-ல் 4.99 கோடியாகக் குறைந்த எண்ணிக்கையில் உயர்வு கண்டுள்ளது.

வருமான வரி கணக்குத் தாக்கல் எண்ணிக்கை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், 2015-16-ம் நிதியாண்டில் ரூ.33.6 லட்சம் கோடியாகவும், 2016-17-ம் நிதியாண்டில் ரூ.38.52  லட்சம் கோடியாகவும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ.43 லட்சம் கோடியாகவும் உள்ளது. இந்த உயர்வானது முறையே 25%, 15% மற்றும் 12% என்ற அளவில் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick