கம்பெனி டிராக்கிங்: தாம்ஸ் குக் (இந்தியா) லிமிடெட்! (NSE SYMBOL: THOMASCOOK)

சுற்றுலா மற்றும் சுற்றுலா சார்ந்த நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் தாமஸ் குக் (இந்தியா) லிமிடெட். இந்தியாவில் இந்த நிறுவனம் அயல்நாட்டுக்குச் செல்லும் நபர்களுக்குத் தேவையான அந்நிய செலாவணிகளை வழங்குதல், கார்ப்பரேட் டிராவல், இன்ஷூரன்ஸ், விசா மற்றும் பாஸ்போர்ட் சேவைகள் மற்றும் இ-பிசினஸ் போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் இந்த நிறுவனத்தின் முதல் அலுவலகம் 1881-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைக்கு ஆசிய பசிபிக் பகுதியில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் பயணங்கள் குறித்த சேவைகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.

தாமஸ் குக், இந்தியா உள்ளிட்ட 21 நாடுகளில் 1,98,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் வெற்றிகரமாக இயங்கிவருகிறது. இந்த நிறுவனம்    பி-டு-பி, மற்றும் பி-டு-சி என்ற இரண்டு பிரிவிலும் சேவைகளை வழங்கி வருகிறது. தாமஸ் குக், எஸ்.ஓ.டி.சி, டி.சி.ஐ, எஸ்.ஐ.டி.ஏ, ஏசியன் ட்ரைல்ஸ், அல்லைடு டி ப்ரோ,  ஆஸ்திரேலியன் டூர்ஸ் மேனேஜ்மென்ட், டெசர்ட் அட்வென்ச்சர்ஸ், டிராவல் சர்க்கிள் இன்டர்நேஷனல் லிமிடெட், பிரைவேட் சபாரிஸ் ஈஸ்ட் & சவுத் ஆப்பிரிக்கா போன்ற பிராண்டுகளுடன் இயங்குகிறது இந்த நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick