ஷேர்லக்: சந்தை இறக்கம் நவம்பரிலும் தொடருமா?

மாலை நான்கு மணிக்கு வருவதாகச் சொன்ன ஷேர்லக், மூன்று மணிக்கே வந்துவிட்டார். “நான்கு மணிக்கு இன்னொரு அவசர மீட்டிங் இருப்பதால், உங்களுடனான மீட்டிங்கை அட்வான்ஸ் செய்துவிட்டேன். கேள்விகளைக் கேளுங்கள்” எனப் பரபரத்தார். நாம் அவருடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

பந்தன் வங்கிப் பங்குகள் வெகுவாகச் சரிந்துள்ளதே?

“கடந்த இரண்டு மாதங்களில் பந்தன் வங்கியில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் ஏறக்குறைய ரூ.42,000 கோடியை இழந்துள்ளனர். நிதி நெருக்கடியில் சிக்கிய ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனத்துக்கு பந்தன் வங்கி வழங்கிய கடன் தொகை குறித்த கவலைகள் எழுந்ததைத் தொடர்ந்து,  பந்தன் வங்கியின் பங்கு விலைகள் சரிவடையத் தொடங்கின. கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதியிலிருந்து இந்த வங்கியின் பங்கு விலை 729 ரூபாயிலிருந்து சரியத் தொடங்கிய நிலையில், வியாழக்கிழமையன்று 380 ரூபாய் என்ற அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. இந்தச் சரிவின் காரணமாக பந்தன் வங்கி, ரூ87,000 கோடி சந்தை மதிப்பில் பாதியை இழந்துவிட்டது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick