நிஃப்டியின் போக்கு: வியாபார வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்! | Nifty Expectations: Traders page - Nanayam Vikatan | நாணயம் விகடன்

நிஃப்டியின் போக்கு: வியாபார வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

டெக்னிக்கல்கள் வேலை செய்யாதுபோகும் காலமிது. நிஃப்டி 10130 என்ற லெவலிலேயே சப்போர்ட்டை எதிர்பார்க்கலாம் என்றும், இறக்கம் வால்யூமுடன் தொடர்ந்தால் 9800 வரையிலுமே சென்று திரும்ப வாய்ப்புள்ளது என்பதை நினைவில்கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருந்தோம்.

நான்கு நாள்கள் இறக்கத்தையும் ஒரேயொரு நாள் ஏற்றத்தையும் சந்தித்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 273 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்தது. 10130 என்ற லெவலை உடைத்து கீழே சென்று வாரத்தின் இறுதியில் நிறைவடைந்துள்ளது. அடுத்த பெரிய அளவிலான சப்போர்ட் என்பது 9800 என்ற இடத்திலேயே இருக்கிறது. ஒருவேளை, ஏற்றம் வந்தாலுமே 10275 என்ற லெவலைத் தாண்டி மேலே செல்ல வாய்ப்பில்லை என்பதை டிரேடர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

இன்னும் வாலட்டைலிட்டி தொடரவே வாய்ப்புள்ளது. ஏற்றம் வந்தாலுமே மூன்றுக்கும் மேற்பட்ட, வால்யூமுடன் கூடிய பாசிட்டிவ் குளோஸிங்குகள் வந்தால் மட்டுமே சந்தை இறங்கும் டிரெண்ட் ஓரளவுக்கு நின்றுவிட்டது என்று கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick