உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 10 - ஒன்றுபட்டு உழைத்தால் விற்பனையில் ஜெயிக்க முடியும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ராமாஸ் கிருஷ்ணன், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், ஆஷ்பயர் இன்ஃபினிட் அண்டு டேப் இண்டியா (Aspire Infinite and TAB India)

தொழில் நிறுவனங்கள் என்று வந்து விட்டாலே பிரச்னைகளுக்குப் பஞ்சம் இருப்பதில்லை. தினமும் ஒரு பிரச்னை வரும், போகும். புதுப்புது பிரச்னைகள், அதற்கான புதுப்புது தீர்வுகள் என்பது எல்லோரும் காணும் வாழ்க்கை.

அன்றைக்கு திரிலோக்கின் அலுவலகத்தில் ஒரு பிரச்னையை அவரது கவனத்துக்குக் கொண்டுவந்தார்கள். வெங்கடேஷனும், விஸ்வேஸ்வரனும் ஒரே கல்லூரியில் படித்த பால்ய கால நண்பர்கள். அவர்களுடைய வீடும் அருகருகில்தான். இப்போது அவர்கள் வேலை பார்ப்பதும் ஒரே நிறுவனத்தில்தான். ஆனால், காலம் செய்த கோலம், அவர்களை ஒரே டிபார்ட்மென்ட்டில் வேலை பார்க்கவிடாமல், வேறு வேறு டிபார்ட்மென்ட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டது.

வெங்கி இருப்பது டெலிவரி டிபார்ட் மென்ட்டில். விஸ்சி இருப்பது சேல்ஸ் டிபார்ட் மென்ட்டில். இருவரின் செயல்பாடுகள் வேறு, நடைமுறைகள் வேறு, இலக்குகள் வேறு. வெளியில் நகமும்சதையுமாக இருக்கும் இந்த இரு நண்பர் களும் அலுவலகத்தில் நுழைந்தவுடன் எதிரிகளாக மாறிவிடுவார்கள். ‘‘உன்னுடைய டிபார்ட் மென்ட்டினால்தான் என் விற்பனை குறைகிறது’’ என்பது விஸ்சியின் குற்றச்சாட்டு. ‘‘உன் பிரச்னையைச் சொல்லிவிட்டாய். என் பிரச்னையை எங்கே போய் சொல்வது?’’ என்பது வெங்கியின் பதில்.

இருவரும் இப்படி அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது  திரிலோக்கின் காதுக்கு வந்தது. இந்த இரு டிபார்ட்மென்ட்டுக்கும்  பொறுப்பானவர்கள் அனைவரையும் அழைத்தார் திரிலோக். வெங்கியும், விஸ்சியும் அதில் முக்கியமாக இடம்பெற்றிருந்தார்கள். முதலில், இந்த இருவரையும் கூட்டத்தினரைக் கைதட்டிப் பாராட்டச் சொன்னார் திரிலோக்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick