கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 19 - பட்ஜெட்டை மீறினால் சிக்கல் நிச்சயம்! | Financial management tips for young adults - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 19 - பட்ஜெட்டை மீறினால் சிக்கல் நிச்சயம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ப்போதுமே எல்லா விஷயங்களுக்கும் பட்ஜெட் போட்டு செலவு செய்வது நல்லது. அதேசமயம், பட்ஜெட்டுக்குள் அந்த விஷயத்தைச் செய்துமுடிப்பதும் அவசியம். தேவையில்லாத ஆலோசனைகளைக் கேட்டோ, அதிக ஆசைப்பட்டோ அகலக்கால் வைக்கும்போது நிச்சயமாகக் கடன் சுழலில் சிக்க வேன்டிவரும். அப்படி அகலக்கால் வைத்துக் கடன் சிக்கலில் சிக்கிக்கொண்ட மதுரையைச் சேர்ந்த பரமேஸ்வரன் தன் நிலையை விளக்கினார்...

“எனக்கு வயது 36. சிவில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு ஐந்து ஆண்டுகள் கட்டுமான நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.40,000 சம்பளத்துக்குப் பணியாற்றி வந்தேன். நான்கு ஆண்டுகளுக்குமுன் பிறகு நானும், என் இரண்டு நண்பர்களும் ஆளுக்கு ரூ.8 லட்சம் முதலீடு செய்து, கட்டுமானத் தொழிலுக்கு தேவையான பொருள்களை சப்ளை செய்யும் பிசினஸை நடத்திவந்தோம். பிசினஸில் வரும் லாபத்தை மூவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்வோம். என் மனைவி குடும்ப நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறார். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை. ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்.


இந்த நிலையில்தான் நான் சொந்த வீடு கட்ட ஆரம்பித்தேன். நான் வீடு கட்டுவதற்கான சிமென்ட், செங்கல், மணல், கம்பி உள்ளிட்ட பொருள்களை எங்கள் நிறுவனத்திலேயே எடுத்துக்கொண் டேன். சரியாகக் கணக்குவழக்கு களைக் குறித்து  வைத்துக்கொண்டே எடுத்துப் பயன்படுத்தினேன். சொந்தக் கடையில் பொருள்களை எடுத்துக்கொள்வதால், எனக்குக் கட்டுப்பாடு இல்லாமல் போனது. சிலரின் ஆலோசனைகளைக் கேட்டு வீட்டை பிளான் மாற்றி பெரிதாகக் கட்ட ஆரம்பித்தேன். ரூ.15 லட்சம் வரையிலான பொருள் களை என் கடையில் எடுத்துப் பயன்படுத்தியிருந்தேன். தவிர, பூர்வீகச் சொத்தை விற்றதன் மூலம் கிடைத்த ரூ.15 லட்சத்தைக் கொண்டும், மனைவியின் நகை களை அடமானம் வைத்ததன் மூலமான ரூ.4 லட்சத்தைக் கொண்டும் வீட்டைக் கட்டி முடித்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick