கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

தங்கம் (மினி)

பங்குச் சந்தையில் ஒரே வாரத்தில்தான் எத்தனை, எத்தனை மாற்றங்கள்! பங்குச் சந்தை சென்ற வாரம் வெள்ளியன்று முடியும் போது, கடுமையான இறக்கத்தில் முடிந்தது. அதன் அடிப்படையில் தங்கம் வலிமையான ஏற்றத்தில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், பங்குச் சந்தைக்கு கடந்த வாரம் கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு வாரத்தின் அடிப்படையில் பெரிய ஏற்றத்தைக் கண்டது. இந்த வலுவான ஏற்றம், தங்கத்தை சற்றே வலுவிழக்க செய்துள்ளது.

தங்கம் கடந்த நான்கு வாரங்களாக ஒரு பக்கவாட்டு நகர்விலேயே இருந்து வந்தது. எப்போதெல்லாம் 32300 எல்லையை நோக்கி நகருகிறதோ, அப்போதெல்லாம் வலிமையாகத் தடுக்கப்பட்டு, பின் கீழே இறங்கியது. அதேபோலவே, கீழே 31800 என்ற எல்லையில் வலிமையான ஆதரவை எடுத்து மேலே நகர்ந்துகொண்டு இருந்தது. தற்போது இந்த ஆதரவு எல்லைதான் உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் தொடர்ந்து இரண்டு வாரங்களாகவே 31550 என்ற ஆதரவு எல்லையைத் தக்கவைத்துள்ளது. அதேநேரம், 31880 என்ற தடைநிலை இன்னும் வலுவாகவே உள்ளது.”

தங்கம் கடந்த வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 31880-ஐ உடைக்கவே இல்லை. கடந்த வாரம் திங்களன்றே கொஞ்சம் வலிமை குன்ற ஆரம்பித்து இறங்கியது. இந்த இறக்கம் செவ்வாயன்றும் தொடர்ந்தது. புதனன்று இன்னும் சற்றே இறங்கி 31711 என்ற எல்லையைத் தொட்டது. வியாழனன்று ஒரு இடைக்கால ஏற்றம் நிகழ்ந்தாலும், வெள்ளியன்று இறக்கம் தொடர ஆரம்பித்துள்ளது. 

இனி என்ன நடக்கலாம்? நவம்பர் கான்ட்ராக்ட் டெலிவரி பிரீயட்டுக்குள் நுழைவதால், இனி நாம் டிசம்பர் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்ளலாம். தற்போதைய தடைநிலை 31930 ஆகும். உடனடித் ஆதரவு எல்லை 31490 ஆகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick