மன்த்லி டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி - எதைத் தேர்வு செய்தால் லாபம்?

வ்வொரு மாதமும் வருமானம் தரும் மன்த்லி டிவிடெண்ட் திட்டங்களில் (Monthly dividend plans), ஓய்வுபெற்ற முதலீட்டாளர்கள் பலரும் தங்களது ஓய்வுக்காலப் பணத்தை முதலீடு செய்து டிவிடெண்ட் வருமானம் பெற்றுவந்தார்கள். இந்தத் திட்டத்தில் ஒரு பெரும் தொகையை இந்த வகை திட்டத்தில் முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் டிவிடெண்ட் வருமானம்மூலம் மாதாந்திரச் செலவுக்கு வருமானம் பெற்று வந்தார்கள்.

சிறிது காலம் முன்பு வரை, இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் கிடைக்கும் வருமானத்திற்கு எந்த வரியும் கிடையாது. இப்போது, இதற்கும் வரி கட்டவேண்டிய நிலைமை வந்துவிட்டது.

எஸ்.டபிள்யூ.பி (SWP - Systematic Withdrawal Plan)

இது ஒருபக்கமிருக்க, சமீபத்தில் மத்திய அரசாங்கம் ஈக்விட்டி ஃபண்டுகளின் டிவிடெண்ட் வருமானத்திற்கு டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரி (Dividend distribution tax) என்கிற அளவில் 10% வரி விதித்தது. இதனைத் தொடர்ந்து, ஈக்விட்டி டிவிடெண்ட் திட்டத்திலிருந்து (Dividend paying equity Plans) குரோத் திட்டத்திற்கு (Growth Plans) பலரும் மாறத் தொடங்கினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick