மத்திய அரசு Vs ஆர்.பி.ஐ - மோதலுக்கு என்ன காரணம்?

பிரச்னை

ல நாள்களாக உள்ளுக்குள்ளேயே புகைந்துகொண்டிருந்த மத்திய அரசு மற்றும் மத்திய வங்கிக்கு இடையேயான மோதல் போக்கு, மத்திய வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யாவின் தயவினால் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.

கடந்த வாரம் மும்பையில் நடந்த ‘ஏ.டி.ஷெராப் நினைவு’ நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு நாட்டின் மத்திய வங்கியினைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும் என்று கொஞ்சம் காட்டமாகவே பேசினார். சமீப காலத்தில் ஆர்.பி.ஐ தரப்பில் மத்திய அரசுக்கு எதிராக இந்த அளவுக்கு யாரும் பேசியதில்லை என்பதால், விராலின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

விராலின் பேச்சினைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் காட்டமாகப் பதில் சொன்னார். அதுதவிர, வாராக் கடன் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அரசாங்கம் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சில தடாலடி நடவடிக்கைகளை எடுக்கப் போக, ஆர்.பி.ஐ கவர்னர் பதவியை உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்யப் போவதாக செய்தி பரவியது. இதனைத் தொடர்ந்து மீடியாக்களுக்குப் பேட்டியளித்த மத்திய நிதி அமைச்சர்,     ஆர்.பி.ஐ-யின் தனித்துவம் காக்கப்படும் என்று சொன்னதைத் தொடர்ந்து, இந்தப் பரபரப்பு கொஞ்சம் தணிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick