எல்லோருக்கும் ஏற்ற மல்டி அஸெட் ஃபண்ட்!

ஐ.வி.சுப்ரமணியம் எம்.டி, குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட்சிறப்புப் பேட்டி

குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தலைமை செயல் அதிகாரி மற்றும் முதன்மை முதலீட்டு அதிகாரியாக இருக்கும் ஐ.வி.சுப்ரமணியம் அண்மையில் சென்னைக்கு வந்திருந்தார். மியூச்சுவல் ஃபண்ட் துறையில் 20 ஆண்டு களுக்கு மேல் அனுபவம்கொண்ட அவர் நமக்களித்த பேட்டி... 
 
மியூச்சுவல் ஃபண்ட் துறையை ஒழுங்குபடுத்தும் செபி, அதிக தொகையை நிர்வகிக்கும் ஃபண்டுகளுக்கு செலவு விகிதத்தைக் குறைத்திருக்கிறது. மேலும், முதலீடு செய்யும்போதே ஏஜென்ட்கள், விநியோகஸ்தர்களுக்கு அளிக்கப்படும் 1% அப்ஃப்ரன்ட் (upfront) கமிஷனை ரத்து செய்துள்ளது. இதனால் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை பாதிப்புக்கு உள்ளாகுமா?

“பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் சிறிய அளவில் நிதியை நிர்வகிக்கும் ஏஜென்ட்களுக்கு சிறிது பாதிப்பு இருக்கத்தான் செய்யும். பொதுவாக, நாங்கள் அதிக எண்ணிக்கையில் ஏஜென்ட்கள், விநியோகஸ்தர்களை வைத்துக்கொள்வதில்லை. டைரக்ட் பிளான் களையே முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகிறோம். 2005-06-ம் ஆண்டு வாக்கில் அப்ஃப்ரன்ட் கமிஷன் அதிகம். பல ஃபண்ட் நிறுவனங்களில் 2-3 சதவிகிதம்கூட அப்ஃப்ரன்ட் கமிஷன் இருந்தது. அதன்பிறகு, இது 1 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இப்போது  அதுவும் இல்லை என்பதால், முதலீட்டாளர்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும். எங்களின் ஃபண்டுகளின் செயல்பாடு பிடித்து, அதனை முதலீட்டாளர்களுக்கு விநியோகிப்பவர்களுக்கு 0.15% கமிஷன் கொடுக்கிறோம்.” 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்