உங்கள் மூளை உங்களைப் பணக்காரர் ஆக்குமா?

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : Your Money and Your Brain       

ஆசிரியர்: Jason Zweig

பதிப்பகம் : Simon & Schuster

டுமையாக உழைத்தால் நாம் பணக் காரர் ஆகலாம் என்றுதான் நமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளது. ஆனால், உங்கள் மூளை உங்களைப் பணக்காரர் ஆக்கும் என்பது இதுவரை நம்மிடம் யாரும் சொல்லாத உண்மை. ‘உங்கள் மூளையும் உங்கள் பணமும்’ என்கிற புத்தகத்தின்மூலம் ஜேசன் ஜீவிக் என்பவர் இந்த உண்மையைப் புட்டுப்புட்டு வைக்கிறார்.

 மூளை என்பது நாம் சிந்திக்க உதவும் கருவி என்று நாம் நினைத்துக் கொண்டி ருக்கிறோம். ஆனால், பத்து ரூபாய்கூட இல்லாத ஒரு ஏழை பணக்காரனாக மாறுவதற்கும், பணக்காரன் பெரும் பணக்காரனாக மாறுவதற்கும் காரணம், இந்த மூளைதான்.

ஒருவர் என்னதான் புத்திசாலியாக இருந்தாலும், முதலீடு என்று வந்துவிட்டால் சில முட்டாள்தனங்களைச் செய்துவிடவே செய்கிறார். உங்களுடைய மூளையை மேம்படுத்திக்கொள்ளாவிட்டால், உங்களுடைய செல்வத்தை நீங்கள் அதிகரித்துக்கொள்வது கடினம். நல்ல வேளையாக, சமீப காலத்தில் பல ஆராய்ச்சி யாளர்கள் மூளைக்கும், பணத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து  (நியூரோ எக்கனாமிக்ஸ்) பல ஆராய்ச்சிகளைச் செய்து, அதன் முடிவுகளைத் தெளிவாக அறிவிக்கவும் செய்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick