ட்விட்டர் சர்வே: ஆர்.பி.ஐ மோதலுக்கு அரசாங்கம் காரணமா?

த்திய அரசுக்கும், ஆர்.பி.ஐ-க்கும் இடையே நடக்கும் மோதலுக்குப் பல காரணங்கள் அடிப்படையாக உள்ளன. இந்த மோதலுக்கு ஆர்.பி.ஐ தனது தனித்துவத்தைக் காத்துக்கொள்ள நினைக்கும் சிந்தனை காரணமா, ஆர்.பி.ஐ-யைக் கட்டுப்படுத்த நினைக்கும் மத்திய அரசு காரணமா, மோசமான பொருளாதாரச் சூழல் காரணமா என்று கேட்டிருந்தோம்.

இந்த சர்வேயில் கலந்துகொண்டு பதில் சொன்னவர்களில் 52% பேர், இந்திய அளவில் நிலவும் மோசமான பொருளாதாரச் சூழல்தான் காரணம் என்று சொல்லியிருக்கின்றனர். பொருளாதாரச் சூழல் நல்ல நிலையில் இருக்கும் போது, யாருக்கும் யாருடனும் மோதல் ஏற்படுவ தில்லை. ஆனால், பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கும்போது, எல்லோருக்கும் எல்லோருடனும் மோதல் ஏற்படுவது இயல்பு. இப்போது வங்கிசாரா நிதி நிறுவனங்களின் நிதிச் சிக்கல், வாராக் கடன் எனப் பல பிரச்னைகள் உச்சத்தில் இருப்பதால்தான், ஆர்.பி.ஐ-க்கும், மத்திய ரிசர்வ் வங்கிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது என்பதைச் சொல்வது சரியே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்