பங்குச் சந்தை முதலீடு... பயத்தைப் போக்கும் வழிகாட்டி! | How to Invest Right and Prosper: A book to guide Mutual fund investment - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/11/2018)

பங்குச் சந்தை முதலீடு... பயத்தைப் போக்கும் வழிகாட்டி!

புத்தக வெளியீடு

முதலீட்டு ஆலோசகர் ஏ.கே.நாராயண் எழுதிய ‘How to Invest Right and Prosper’ என்கிற ஆங்கில புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனரும், சி.டி.எஸ்.எல் சேர்மனுமான   டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நூலை வெளியிட, முதல் பிரதியை சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் சுப்ரமணியம் பெற்றுக்கொண்டார். இதில், ஆஃம்பி அமைப்பின் முன்னாள் சேர்மனும், பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ஏ.பாலசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சரியா?

முன்னதாக நடந்த மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டத்தில் ஏ.பாலசுப்ரமணியம் பேசும்போது, “ஆம்ஃபி அமைப்பின் சார்பான விளம்பரத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சரியே என்பதாக இருக்கும். இன்றைய நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சரியா என்கிற கேள்வி எழும். இந்தக் கேள்வி எனது அனுபவத்தில் கடந்த 25 வருடங்களில் பல தடவை எழுந்திருக்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு லாபம் கொடுத்துவருகிறது. பணமதிப்பு இழப்புக்குப்பிறகு மியூச்சுவல் ஃபண்டுக்கு அதிக முதலீடு வந்துள்ளது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க