எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (NSE SYMBOL: EVERESTIND)

கம்பெனி டிராக்கிங்

பில்டிங் மெட்டீரியல்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனம் எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். 1934-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இது. இந்த நிறுவனம் பில்டிங் மெட்டீரியல்கள் மற்றும் ப்ரீ-இன்ஜினீயர்டு ஸ்டீல் கட்டுமானங்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.

நிறுவனத்தின் தயாரிப்புகள்

நீண்ட அனுபவத்தினைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், தற்போது  மாறிவரும் தேவைகளுக்கு ஏற்றாற்போல் கட்டுமானப் பொருள்களை உற்பத்தி செய்து சப்ளை செய்யும் நிறுவனமாகத் திகழ்கிறது. இன்றைய சூழலுக்கு ஏற்றாற்போல் மேற்கூரைகள், சுவர்கள், தரை மற்றும் வெளிப்புற அழகுக்காகப் போடப் படும் க்ளேடிங் போன்றவற்றை வீடுகள், கமர்ஷியல் கட்டடங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் பயன்படுத்துவதற்கான வகையில் உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick