ஷேர்லக்: சந்தை நிலவரம் மாறுகிறது! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ஷேர்லக்: சந்தை நிலவரம் மாறுகிறது!

சொன்னது சொன்னபடி சரியான நேரத்துக்கு தீபாவளி ஸ்வீட் பாக்ஸுடன் வந்துசேர்ந்தார் ஷேர்லக். நமக்கு ஸ்வீட் பாக்ஸைக் கொடுக்க, நாமும் தயாராக வைத்திருந்த தீபாவளிப் பரிசை அவருக்கு வழங்கினோம். மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்டவர் நமக்கு 20 நிமிடங்களை ஒதுக்கினார். நாம் கேள்விகளைக் கேட்கத் தயாரானோம்.

வங்கிகளின் நுகர்வோர் கடன் போர்ட்ஃபோலியோ சரிவடைந்துள்ளதாமே?

“நுகர்வோர் கடன்கள் சரியாகத் திரும்ப வராமல் போவதற்குச் சாத்தியமுள்ளது என்கிற அச்சம் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாகவே, வங்கிகள் கடன் வழங்குவதைத் தவிர்த்து வந்தன. செப்டம்பர் 28-ம் தேதி நிலவரப்படி, ஓராண்டில் வங்கிகளின் நுகர்வோர் பொருள்களுக்கான கடன் 82% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஓராண்டுக்குமுன் ரூ.17,846 கோடி கடன் வழங்கியிருந்த நிலையில், தற்போது அது ரூ.3,225 கோடியாகச் சரிந்துள்ளது. அதேசமயம், இந்த வகைக் கடன்களை வழங்கும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன், செப்டம்பர் மாதத்தில் 41.5% அதிகரித்துள்ளது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick