நிஃப்டியின் போக்கு: அமெரிக்க வட்டி விகித முடிவு... சந்தையை ஓரளவுக்கு மாற்றலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

வியாபாரத்திற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என்றும், அடுத்த பெரிய அளவிலான சப்போர்ட் என்பது 9800 என்ற இடத்திலேயே இருக்கிறது என்றும், ஒருவேளை ஏற்றம் வந்தாலுமே 10275 என்ற லெவலைத் தாண்டி மேலே செய்ய வாய்ப்பில்லை என்பதை டிரேடர்கள் நினைவில் கொள்ளவேண்டும் என்றும் சொல்லியிருந்தோம். 10020 மற்றும் 10606 என்ற எல்லைகளைத் தொட்ட நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 523 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது.

மூன்றே டிரேடிங் (தீபாவளி முகூர்த் டிரேடிங் தவிர்த்து) தினங்களைக் கொண்ட வாரத்தில் நுழைய இருக்கிறோம். தற்போதைய டெக்னிக்கல் சூழ்நிலையில் 10450 என்ற லெவலுக்கு மேலேயே இருந்தால் 10640 மற்றும் 10740 என்ற லெவல் வரை சென்று திரும்பலாம். இறக்கம் வந்தால் 10430 /10375 போன்ற லெவல்களில் சிறிய தொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick