உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 11 - சைக்கிளைப் போல இருங்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பிசினஸ்ராமாஸ் கிருஷ்ணன், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், ஆஷ்பயர் இன்ஃபினிட் அண்டு டேப் இண்டியா (Aspire Infinite and TAB India)

தீபாவளி முடிந்த அடுத்த நாள் ‘சவுண்டிங் போர்டு’ உறுப்பினர்கள் அனைவரும் அந்தக் குழுவின் மூத்த உறுப்பினர்களான திரிலோக்கின் வீட்டில் கூடினார்கள். தீபாவளிப் புத்தாடைகள் அணிந்து அனைவரும் வந்திருந்தார்கள். தீபாவளி இனிப்புகளை அனைவரும் சாப்பிட்டு முடித்தபிறகு, அன்றைய கூட்டத்துக்குப் புதிதாக ஒரு இளம் தொழில்முனைவர் வந்திருப்பதை எல்லோரும் கவனித்தார்கள். ‘சவுண்டிங் போர்டு’-ல் உறுப்பினராக இருக்கும் ரமேஷின் நண்பர் சிவாதான் அந்தப் புதிய நபர். இந்தக் குழுவின் நடைமுறைகள் பற்றி ரமேஷ்மூலம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறார் சிவா. என்றாலும், முதல்முறையாக இந்த மீட்டிங்கில் அவர் கலந்துகொள்கிறார் என்பதால், அவருக்குக் கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது. அவரைக் கூட்டத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு முறைப்படி அறிமுகம் செய்துவைத்தார் ரமேஷ்.

‘‘என் நண்பர் சிவக்குமார், பாரத் ஹெவிமெட்டல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சி.இ.ஓ. அவரது அப்பாதான் அந்த நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். இன்ஜினீயரான சிவா, தொழில் உலகுக்குப் புதுசு’’ என்று சொல்லிவிட்டு, அவரைப் பேசும்படி அழைத்தார். சிவா தயங்கித் தயங்கி தனது பிரச்னையைச் சொல்ல ஆரம்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick