கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 20 - நிம்மதியைப் பறிக்கும் ஆடம்பரம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சுலபமாகக் கடன் கிடைக்கிறது என்பதற்காகத் தேவைப்படுகிறதோ, இல்லையோ இஷ்டத்துக்கு வாங்கித் தள்ளுவார்கள் சிலர். அப்படி நிறையக் கடன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டவர்களில் ஒருவர்தான் சண்முகம். அவர் தன் நிலையை விளக்குகிறார்...

“என் வயது 41, திருவள்ளூரில் வசிக்கிறேன். தனியார் பார்மா நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். மாதச் சம்பளம் ரூ.72,000. என் மனைவி, வீட்டுப் பொறுப்பைக் கவனித்துக் கொள்கிறார்.
 
எனக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் 9-ம் வகுப்பும், இளையவன் 3-ம் வகுப்பும் படிக்கிறார்கள். அவர்களுக்கு பள்ளிக் கட்டணம் மட்டும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஆகிறது. கிரெடிட் கார்டு மூலம் வீட்டுக்குத் தேவையான பொருள்களை பர்ச்சேஸ் செய்தது, பள்ளிக் கட்டணம் செலுத்தியது, அவ்வப்போது வெவ்வேறு செலவுகளுக்குக் கடன் வாங்கியது என்ற வகையில் ரூ.13 லட்சத்துக்கு மேல் கடன் ஆகிவிட்டது.

என் கம்பெனி மூலம் எப்போதாவது ஃபாரின் டூர் அழைத்துப் போவார்கள். அப்போது என் குடும்பத்தையும் அழைத்துப் போவதுண்டு. எனக்கு மட்டும்தான் கம்பெனி செலவு செய்யும். என் குடும்பத்தினருக்கு நான் செலவு செய்த வகையிலும் கடன் அதிகமாகிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick