கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி | Commodity trading Metal, oil and agri products - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

தங்கம் (மினி)

பங்குச் சந்தை தாக்குப் பிடிக்கிறது. தங்கம் விலை விழ ஆரம்பித்துள்ளது.  பங்குச் சந்தை இறங்கினால் தங்கம் ஏறத் தயாராகத்தான் இருந்தது.  ஆனால், பங்குச் சந்தை அவ்வப்போது இறங்குவதுபோல் போக்குகாட்டிவிட்டு, மீண்டும் ஏறி நிற்கிறது. இதனால், தங்கத்தின் நிலைப்பாடு நிச்சயம் இல்லாமல் இருந்தது. தங்கம் கடந்த மூன்று வாரமாக கீழே 31500-ஐ ஆதரவு எல்லையாகவும் மேலே 32100-ஐ தடைநிலையாகவும் கொண்டு இயங்கி வந்தது. கடைசியாகக் கடந்த வாரம் தங்கம் கீழ் எல்லையை உடைத்து இறங்க ஆரம்பித்துள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “நவம்பர் கான்ட்ராக்ட் டெலிவரி பிரீயட்டுக்குள் நுழைவதால், இனி நாம் டிசம்பர் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்ளலாம். தற்போதைய தடைநிலை 31930 ஆகும்.  உடனடித் ஆதரவு எல்லை 31490 ஆகும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick