ஷேர்லக்: தொடரும் கரடி, காளை மோதல்! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/11/2018)

ஷேர்லக்: தொடரும் கரடி, காளை மோதல்!

“தீபாவளிக்காக சொந்த ஊருக்குப் போயிருந்தேன். அப்படியே மும்பைக்கு அவசர வேலையாக வந்துவிட்டேன். நீங்கள் கேள்விகளை அனுப்புங்கள்" என வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பவே, உடனே கேள்விகளை அனுப்பினோம். அடுத்த அரை மணி நேரத்தில் பதில்களை அனுப்பி வைத்தார் ஷேர்லக்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நெகட்டிவ் வருமானம் கொடுத்திருக்கின்றனவே?

‘‘கடந்த ஓராண்டில் மொத்தமுள்ள 347 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு களில், 78% சதவிகிதம் நஷ்டத்தைக் கொடுத்துள்ளன. இதில் 106 ஃபண்டுகள் 10 சதவிகிதத்துக்கும் அதிகமான இழப்பைக் கொடுத்துள்ளன.
 
இதில், உள்கட்டமைப்பு துறைதான் மிக மோசமான செயல்பாடு கொண்டதாக இருக்கிறது. ஹெச்.எஸ்.பி.சி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட் 35.83% இழப்பைச் சந்தித்துள்ளது. இந்த ஃபண்ட் பிரிவின் சராசரி இழப்பு 18.62 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த ஓராண்டில் நிஃப்டி ஸ்மால்கேப் இண்டெக்ஸ் 28%,  நிஃப்டி மிட்கேப் இண்டெக்ஸ் 12% சரிந்துள்ளன.

மொத்தமுள்ள 36 மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்ட் திட்டங்களுமே கடந்த ஓராண்டில் நஷ்டத்தைக் கொடுத்துள்ளன. ஆனால், இதுபற்றி கவலைப்படத் தேவை இல்லை என்கிறார்கள் பகுப்பாய்வாளர்கள். குறுகிய காலத்தில் ஈக்விட்டி ஃபண்டுகளின் வருமான இழப்பைக் கண்டு கலங்கத் தேவையில்லை.  ஐந்து ஆண்டுகளுக்கு மேல் முதலீட்டு கால இலக்கு இருந்தால் மட்டுமே ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடுசெய்ய வேண்டும் என்கிறார்கள், அவர்கள்.” 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close