நிஃப்டியின் போக்கு: செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்! | Nifty Expectations: Traders page - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/11/2018)

நிஃப்டியின் போக்கு: செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

மெரிக்க வட்டிவிகித முடிவுகள் சந்தையின் திசையை ஓரளவுக்கு மாற்றலாம் என்றும் தற்போதைய டெக்னிக்கல் சூழ்நிலையில் 10450 என்ற லெவலுக்கு மேலேயே இருந்தால் 10640 மற்றும் 10740 என்ற லெவல் வரை சென்று திரும்பலாம் என்றும் இறக்கம் வந்தால் 10430 /10375 போன்ற லெவல்களில் சிறியதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்லியிருந்தோம்.

10477 மற்றும் 10619 என்ற லெவல்களைத்தொட்ட நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 32 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது. மீண்டும் நிஃப்டி 10580 என்ற லெவலுக்கு மேலேயே இருந்தால் மட்டுமே ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது என்ற நிலைமை டெக்னிக்கலாக இருக்கிறது. ஏற்றம் தொடர்ந்தாலுமே 10650 மற்றும் 10700 என்ற லெவல்களில் இருக்கும் ரெசிஸ்டன்ஸ்களினால் கொஞ்சம் தடுமாற வாய்ப்புள்ளது. மாறாக இறக்கம் வந்தால் 10500/10420 என்ற லெவல்கள் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது என்பதை டிரேடர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.