முதலீட்டு ரகசியங்கள் - 12 - முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஒழுக்கமும், நேரமும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
முதலீடு

வெற்றிகரமான முதலீட்டுக்கு அறிவு என்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில் ஒழுக்கத்தைக் குறித்தும், நேரத்தைக் குறித்தும் பார்ப்போம்.

ஒழுக்கம் எப்போது எளிது?

வெற்றிகரமான முதலீட்டுக்கு முதலீட்டு ஒழுக்கம் மிகவும் அவசியம். சரியான சொத்தில் நீண்ட காலத்துக்கு நாம் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், அதற்கு நிச்சயம் நல்ல வருவாய் கிடைக்கும். உதாரணமாக, சுரேஷ் என்பவரை  எடுத்துக்கொள்வோம். ஆசியராக வேலை பார்த்த அவர், 15 ஆண்டு காலத்துக்கு வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ-யைக் கட்ட வேண்டியுள்ளது. அவர், தனது மாதாந்திர இ.எம்.ஐ-யைத் தவறாமல் கட்டி வந்தால்தான், கடன் தவணைக் காலம் முடிவடையும்போது, அந்த வீடு அவருக்குச் சொந்தமாகும். ஒவ்வொரு மாதமும் இ.எம்.ஐ கட்டுவது மிகப் பெரிய பொறுப்பு என்பது மட்டுமல்ல, முதலீட்டாளர் தரப்பில் அதற்கு ஒழுக்கமும் தேவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick