பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 12 - பிசினஸ் பார்ட்னரை இழக்காதீர்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ராமாஸ் கிருஷ்ணன், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், ஆஷ்பயர் இன்ஃபினிட் அண்டு டேப் இண்டியா (Aspire Infinite and TAB India)

ந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துவரும் வாசகத் தொழிலதிபர் ஒருவர் நமக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்: ‘‘கடந்த பதினைந்து  ஆண்டுகளாக ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இப்போது ஒரு பார்ட்னரை சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய நெருங்கிய நண்பனையே எனது பார்ட்னராக சேர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். எனது இந்த முடிவு சரியா?’’ என்று கேட்டிருந்தார்.

அந்த சமயத்தில்தான் இரண்டு தொழில்முனைவர்கள் அவர்களது குடும்ப பிசினஸிலிருந்து பிரிந்து, அவர்களுக்கான தொழிலை ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை தந்துகொண்டிருந்தேன். அதுமட்டுமல்ல, கடந்த முப்பது ஆண்டுகளாக ஒன்றாக பிசினஸ் செய்துவந்த நண்பர்கள் இருவர், சமீபத்தில் தனித்தனியாகப் பிரிந்துபோனதையும் பார்த்தேன்.

எஸ்.எம்.இ தொழில் நிறுவனங்களில் புதிய தொழில் கூட்டாளிகளைச் சேர்த்துக்கொள்வதும், ஏற்கெனவே இருக்கும் கூட்டாளிகள் உறவைப் பிரித்துக்கொள்வதும் அடிக்கடி நடக்கும் விஷயம்தான். பெரிய நிறுவனங்களில் இதுமாதிரியான பிரச்னைகள் பெரும்பாலும் வராது. காரணம், அங்கு தினமும் பல பிரச்னைகள் வரும், போகும். நிறுவனம் சந்திக்கும் பிரச்னையைத் தீர்ப்பதற்காக தனிமனிதர்கள் தங்கள் பிரச்னைகளை மறந்து ஓடவேண்டிய கட்டாயம் அங்கு இருக்கிறது. எனவே, மனித உறவுகளுக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick