கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் (மினி)

நாம் எதிர்பார்த்தது தங்கம் போலவே, ஒரு நல்ல இறக்கத்தைச் சென்ற வாரம் கண்டது. பொதுவாக, பங்குச் சந்தையுடன் தங்கத்துக்குள்ள தொடர்பு பெரும்பான்மையான நேரங்களில் ஒத்துப்போகும். அதாவது, ஒரு எதிர்மறையான உறவுமுறை ஆகும். பங்குச் சந்தை ஏறுமுகமாக இருக்கும்போது, தங்கம் இறங்கும். பங்குச் சந்தையில் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் வாங்குபவர்களாக மாறியதும்கூட, தங்கத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதேநேரம், சென்ற வாரம் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் டாலர் இண்டெக்ஸ் ஏறுமுகமாக இருந்துவந்ததும், தங்கம் இறங்குவதற்கு ஒரு காரணமாக அமைந்திருந்தது. ஆனாலும், இறக்கங்கள் வரும்போது புல்பேக் ரேலி வருவதும் சகஜம்தான்.

சென்ற வாரம் சொன்னது…  ‘‘தங்கம் தற்போது 31040 என்ற எல்லையை உடனடி ஆதரவாகவும், மேலே 31560 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick