கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி | Commodity trading Agri products - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில் சென்ற வாரமும் ஒரு நல்ல இறக்கத்திற்குப்பிறகு, ஒரு ‘பியர்சிங் பேட்டன்’ என்று சொல்லப்படும் இரண்டு கேன்டில்கள் சேர்ந்து தோற்றுவிக்கும் காளைகளுக்கான கேன்டில் அமைப்பு தோன்றியது.  இந்த அமைப்பு, இறக்கத்தின் முடிவைக் காட்டுவதாகவும், ஏற்றத்தின் தொடக்கத்தைக் காட்டுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம். 

முந்தைய வாரம் மென்தா ஆயில், நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 1760-ஐ உடைத்து இறங்கி, குறைந்தபட்சமாக 1731-ஐ தொட்டது.  இந்த நிலையில், அடுத்து மூன்று நாள்களும் ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறி இருந்தது. இந்த பக்கவாட்டு நகர்வில் இருந்தபோதுதான், மென்தா ஆயில் ஒரு ‘பியர்சிங் பேட்டனை’த் தோற்றுவித்தது.  அதன்பிறகு, இறக்கம் முடிந்து மெள்ள மெள்ள மேலே திரும்பியது. இந்தத் திருப்பம் திங்களன்று மிக வலிமையான ஏற்றமாக மாறியது. அதாவது, சென்ற வாரம் திங்களன்று காலையில் 1775 என்ற புள்ளியில் தொடங்கி, உச்சமாக 1812-ஐ தொட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick