மியூச்சுவல் ஃபண்ட்: எஸ்.ஐ.பி Vs மொத்த முதலீடு - உங்களுக்கு எது ஏற்றது? | SIP or Lump Sum: How Should You Invest in Mutual Funds? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/11/2018)

மியூச்சுவல் ஃபண்ட்: எஸ்.ஐ.பி Vs மொத்த முதலீடு - உங்களுக்கு எது ஏற்றது?

மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) என்பது மிகப் பிரபலமான வார்த்தை. கடந்த இரண்டு வருடங்களில் பல முதலீட்டாளர்களால், மிகுந்த எதிர்பார்ப்புகளோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலீட்டு முறையினால், இன்றைக்குப் பங்குச் சந்தை பெரிய அளவில் சரிந்துவிடாமல் தாங்கிப் பிடித்துக்கொண்டுள்ளது.

ஆனால், எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்கியவர்கள் இன்றைக்கு ஒருவிதமான குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்களின் குழப்பத்துக்கு முக்கியமான காரணம், அவர்கள் முதலீடு செய்த தொகை குறைந்து, 5 - 15% நஷ்டம் அடைந்திருப்பதுதான். 

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தும், தங்களுக்கு நஷ்டம் வந்து விட்டதே என்று   முதலீட்டாளர்கள்  வருத்தப்படத் தேவையில்லை. எஸ்.ஐ.பி முதலீடு குறுகிய காலத்தில் ஏன் நஷ்டத்தைத் தந்திருக்கிறது என்பதை சரியாகப் புரிந்துகொண்டால் போதும்.

[X] Close

[X] Close