முதலீட்டுக்குப் புதியவர்கள் புதிய ஃபண்டில் முதலீடு செய்யலாமா?

முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு புதியவர்கள் ஏராளமாக வருகிறார்கள்.  எந்த மாதிரியான ஃபண்டுகளில் முதலீடு செய்வதென்று அவர்களுக்குக் குழப்பம். “புதிதாக வெளியிடப்படும் ஃபண்டில் முதலீடு செய்வது மலிவாக இருக்கும். அதிக யூனிட்கள் கிடைக்கும்” என்று எனக்குத் தெரிந்த  மியூச்சுவல் ஏஜென்ட் ஒருவர் சொல்கிறார். அதிக யூனிட்கள் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால், அது லாபகரமானதா என எனக்குக் குழப்பமாக இருக்கிறது” என்று வாசகர் ஒருவர் கேட்டார்.

அவருக்கு மட்டுமல்ல, பலருக்கும் இந்தக் குழப்பம் இருக்கவே செய்கிறது. அவர்களுக்காக ஓர் உதாரணம் மூலம் விளக்கலாம். ஒருவர் 10,000 ரூபாய் முதலீடு செய்கிறார் என்றால், புதிய ஃபண்ட் வெளியீட்டின்போது, ஒரு யூனிட் மதிப்பு ரூ.10 என்கிறபட்சத்தில் 1,000 யூனிட்கள் கிடைக்கும். இதுவே, ஏற்கெனவே உள்ள ஃபண்ட், அதன் என்.ஏ.வி ரூ.20-க்கு உயர்ந்திருந்தால், இந்த ரூ.10,000 முதலீட்டுக்கு 500 யூனிட்கள்தான் கிடைக்கும். ஏற்கெனவே இருக்கும் ஃபண்டுகளில் குறைவான யூனிட்களே கிடைக்கிறது என்பதால், விவரம் தெரியாத பல முதலீட்டாளர்கள் என்.எஃப்.ஓ-வில் முதலீட்டைச் செய்துவிடுகிறார்கள். முதலீடு எந்த அளவுக்குப் பெருகி வளருகிறது என்பதில் தான் லாபமிருக்கிறது. புதிய ஃபண்ட் வெளியீட்டின்போது, ஏஜென்டுகளுக்கு அதிக கமிஷன் கொடுக்கப்படலாம்; அதனால், ஏஜென்டுகள் அதனைப் பரிந்துரைக்கலாம் என்ற கோணத்திலும் முதலீட்டாளர்கள் யோசித்து கேள்வி எழுப்ப வேண்டியது அவசியம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்