எம்.என்.சி பங்குகளில் முதலீடு செய்யலாமா?

கவர் ஸ்டோரி

எம்.என்.சி (Multi National Company) எனப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது  முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோவை விரிவு படுத்துவதற்கான ஒருவழியாகும். இதற்கு முதலில் உங்கள் முதலீட்டில் எவ்வளவு சதவிகிதத்தை பன்னாட்டு நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய உள்ளீர்கள் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். உங்களது ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் முதலீட்டுக் காலம் போன்றவற்றைப் பொறுத்து, அதை முடிவு செய்துகொள்ளலாம்.  இதில், அனைவருக்கும் ஒரே விதமான  அளவுகோல் இருப்பதில்லை. இருப்பினும், இது தொடர்பாக சில வழிகாட்டுதல்களை இந்தத் துறை நிபுணர்கள் வகுத்துள்ளனர். இது தொடர்பாக முடிவெடுக்க அந்த வழிகாட்டுதல்கள் உங்களுக்கு உதவலாம்.
 
20% முதலீடு

பன்னாட்டு நிறுவன பங்கு களில் எவ்வளவு சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்துப் பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் கூறும் பரிந்துரை, “உங்கள் போர்ட்ஃபோலியோவில் பன்னாட்டு நிறுவன பங்குகளைச் சேர்க்க விரும்பினால், அது 15% - 20% வரை  இருக்கட்டும்” என்பது தான். 20% முதலீடு என்பது, ஒரு நல்ல தொடக்கமாகவும், உங்கள் போர்ட்ஃபோலியோவுக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick