காபி கேன் இன்வெஸ்டிங் - 5 - தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களைப் பாதிக்குமா? | Coffee Can Investing - Nanayam Vikatan | நாணயம் விகடன்

காபி கேன் இன்வெஸ்டிங் - 5 - தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களைப் பாதிக்குமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
முதலீடு

பிரான்சிஸ் ஃபுகுயமா (Francis Fukuyama) தன்னுடைய ‘தி எண்ட் ஆஃப் ஹிஸ்டரி அண்டு தி லாஸ்ட் மேன்’ என்னும் புத்தகத்தில், ஜனநாயகம் நிலைத்திருக்க மக்கள் அதன்மீது பகுத்தறிவு சாராத ஒரு பெருமையைக் கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். மேலும், அவர்கள் ஜனநாயகத்துடன் பெருமையுடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கவும் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அவர்.

சாமுவேல் ஹண்டிங்டன் (Samuel Huntington) மற்றும் ஃபுகுயமா – தாராளவாதக் கொள்கைகொண்ட அரசியல்வாதிகளை வெகுவாகக் கடுப்பேற்றிய இரண்டு அரசியல் அறிஞர்கள் ஆவார்கள்.

சாமுவேல் ஹண்டிங்டன் எழுதிய ‘தி க்ளாஷ் ஆஃப் சிவிலைசேஷன் அண்டு தி ரிமேக்கிங் ஆஃப் தி லாஸ்ட் மேன்” என்ற புத்தகம் 1996-ம் ஆண்டு வெளிவந்தது. இவருடைய மாணவரான பிரான்சிஸ் ஃபுகுயமா எழுதிய ‘தி எண்டு ஆஃப் ஹிஸ்டரி அண்டு தி லாஸ்ட் மேன்’ என்ற புத்தகம் 1992-ம் ஆண்டிலும் வெளிவந்தது.

மனிதகுலத்தில் நாம் அனைவரும் நாகரிகம் அடைந்து விட்டதாகச் சொல்லிக்கொண்டு திரிந்தாலும், மிகப் பெரிய சுயநலமிகளாக நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதிலேயே குறியாக இருப்பதால், கற்காலத்தில் காட்டில் வாழ்ந்த நாகரீகமில்லா மனிதனைப் போன்றே இன்றுவரை வாழ்ந்து வருகிறோம் என்று சொல்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick