பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியங்கள்: ராஜன்

மும்பை

`டைம்ஸ் நவ்’ செய்திக்குப்பிறகு தான்யா பயங்கரமான கோபத்தில் இருந்தாள். அவளுடைய குற்றச்சாட்டுகளைப் பொதுவெளியில் சொல்ல ஆரம்பித்தாள். அவளுடைய அம்மாவின் மரணத்தில் நிதி மந்திரியின் பங்கும் இருக்கிறது என மீடியாக்களுக்கு அவள் தந்த பேட்டிகளில் குற்றம் சாட்டினாள். அவளுடைய அம்மாவை அவர் தனது காரியங்களுக்காக உபயோகித்துக் கொண்டார் என அவளுக்கு எப்போதுமே ஓர் உணர்வு இருந்துவந்தது. அதைத்தான் அவள் தனது பேட்டிகளிலும் சொன்னாள்.

இந்த விஷயங்களினால் மனவருத்தத்துக்கு ஆளாகியிருந்த  நிதி மந்திரி, சில நாள்களுக்குப்பிறகு  மும்பைக்கு வந்து விமான நிலையத்திலிருந்து நேராக ஹோட்டலுக்குச் சென்றார். இது தனிப்பட்ட முறையிலான பயணம் என்பதால், ஊடகங்களின் கண்களில் படாமல் தப்பித்துக்கொண்டார்.

நள்ளிரவுக்குப்பிறகு அவர், இரண்டு கார்கள் பின்தொடர ஹோட்டலிலிருந்து மலபார் ஹில்லை நோக்கிச் சென்றார். பல அடுக்குமாடிகள் கொண்ட அபார்ட்மென்ட்டின்முன் கார்கள் நின்றன. அதிலிருந்து மந்திரி இறங்கி உள்ளே சென்றார்.

தான்யா அவரை அந்த நேரத்தில் அங்கே எதிர்பார்க்கவில்லை என்றாலும்கூட அவள் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிப் படுத்தவில்லை. அவள் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

‘`நான் உள்ளே வரலாமா?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்